காஞ்சிபரம், அக்.6:
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கனார் சித்தரின் குருபூஜை விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் புதன்கிழமை நடைபெற்றன.
காஞ்சிபுரம் திருவள்ளூவர் தெருவில் அமைந்துள்ளது பணாமணீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள அனந்த தீர்த்தக் குளக்கரையின் வடமேற்கு மூலையில் சித்தர் சங்கர லிங்கனார் சமாதி உள்ளது.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தர்களில் ஒருவர் சங்கரலிங்கனார். இவரது குருபூஜையையொட்டி காலையில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை சித்தர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.