காஞ்சிபுரம், பிப்.13:
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரர் ஆலயத்தில் பௌர்ணமியையொட்டி மூலவர் ராஜகுபேரர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு வியாழக்கிழமை அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ளது ராஜகுபேரர் ஆலயம்.இக்கோயிலில் மாதம் தோறும் வரும் பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் தன அபிஷேகமும்,தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
பௌர்ணமியையொட்டி மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றம் 500 ரூபாய் நோட்டுக்களால் தன அபிஷேகம் ஆகியனவும் நடைபெற்றது.பின்னர் மூலவர் ராஜகுபேரர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேகங்களைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இது குறித்து ஆலய நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் கூறுகையில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆலயத்தில் கடன்தொல்லையால் அவதிப்படுவோருக்காக கடன் நிவர்த்தி அபிஷேகம், தன விருத்தி அபிஷேகம் ஆகியன நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொண்டார். பௌர்ணமி சிறப்பு பூஜையில் திரைப்பட பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.