காஞ்சிபுரம், ஏப்.17:
காஞ்சிபுரம் அருகேயுள்ள கூழமந்தல் கிராமத்தில் தமிழ் மாதத்துக்கான முதல் சங்கட ஹர சதுர்த்தியையொட்டி புதன்கிழமை 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மூலவருக்கு முக்கனி படையலுடன் சிறப்பு தீபாராதநைகள் நடைபெற்றன.
சங்கடம் என்றால் துன்பம்,ஹர என்றால் ஒழிப்பது, சங்கடஹர என்றால் சங்கடங்களிலிலிருந்து விடுதலை பெறுவது என பொருளாகும். தமிழ் மாதத்தின்படி தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்சத்தின் 4 வது நாளில் சங்கட ஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
விசுவாச ஆண்டுக்கான முதல் சங்கட ஹர சதுர்த்தியையொட்டி கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், கலச அபிஷேகம் ஆகியன நடைபெற்றது.
பின்னர் மூலவர் விநாயகருக்கு மா, பலா, வாழை ஆகியன விநாயகருக்கு விரும்பிய முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்களும் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.