காஞ்சிபுரம்,ஏப்.9:
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நடைபெற்று வந்தது. இதனையொட்டி தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றது.தினசரி உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தார்.
வசந்த நவராத்திரி உற்சவ நிறைவையொட்டி உற்சவர் பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்தவாறு அம்மனை தரிசித்தனர். உற்சவருக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.