காஞ்சிபுரம், ஏப்.9:
தொண்டை மண்டல வேளாளர் சங்கம் திருத்தணி கிளை சார்பில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் காமாட்சி அம்மனுக்கு பால்க்குட ஊர்வலம் எடுத்து வந்து செலுத்தப்படுவது வழக்கம்.நிகழாண்டு 17 வது பால் குடம் ஊர்வலம் காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்திலிருந்து புறப்பட்டது. ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
பால் குடம் ஊர்வலம் சங்கர மடத்திலிருந்து புறப்பட்டு ராஜவீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பால்குட ஊர்வலத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் எல்லப்ப முதலியார் தலைமை வகித்தார். பால் குடம் ஊர்வலம் தொடக்க விழாவில் மருத்துவர் சுசித்ராராஜ், மாநில செயலாளர் பூபதி,மாநில ஆலோசகர் கிருஷ்ண முதலியார், அனைத்து முதலியார் சங்க தலைவர் எழிலன்,ஆலய மணியக் காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பால் குடம் எடுத்து வந்த அனைத்து பக்தர்களுக்கும் சங்கத்தின் சார்பில் மஞ்சள்,குங்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.