காஞ்சிபுரம், ஜூலை 18:
இந்த நிகழ்வில், பெண் பக்தர்கள் 108 பேர், மங்கல மேள வாத்தியங்களுடன் பால்குடங்களை தாங்கி, ராஜவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மூலஸ்தான ஆலயத்துக்கு சென்றனர்.
பின்னர், மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை நேரத்தில் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த பக்தி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு செய்திருந்தது.