Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் படவேட்டம்மன் கோயிலில் ஆடித் திருவிழா



காஞ்சிபுரம், ஜூலை 18:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஐயப்பா நகர் பகுதியில் உள்ள தாய் படவேட்டம்மன் கோயில் ஆடி உற்சவத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஐயப்பா நகர் பகுதியில் தாய் படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 


இக்கோயிலின் 48 வது ஆண்டு ஆடி உற்சவத் திருவிழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


பின்னர் அம்மன் கரகம் வீதியுலாவும்,கூழ்வார்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக படவேட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


மாலையில் மாஸ்டர் கிருஷ்ணா குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சி, ஒய்யாளி ஆட்டம் ஆகியனவும் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து கும்ப படையலும், அம்மன் வர்ணிப்பும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது.


ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.வடிவேல், நிர்வாகி வ.கிருஷ்ணா ஆகியோர் தலைமயிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.