காஞ்சிபுரம், ஜூலை 3:
பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி ஆதி பீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் வராஹி நவராத்திரியையொட்டி ஆலய வளாகத்தில் பிரம்மாண்டமான யாககுண்டம் அமைக்கப்பட்டு அதில் மங்கள சண்டி ஹோமம் நடைபெற்றது.
ஆலய அர்ச்சகர் சதீஷ்குமார் ஸ்தானீகர் தலைமையில் 8 பேர் அடங்கிய சிவாச்சாரியார்களால் நடைபெற்ற ஹோம பூஜையில் ஏராளமான மூலிகைப்பொருட்கள்,திரவியங்கள் சமர்பிக்கப்பட்டன. நிகழ்வில் கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் ஏழுமலை மற்றும் உறுப்பினர்கள்,நிர்வாகக் குழுவினர் உட்பட பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆலய அர்ச்சகர் சதீஷ்குமார் ஸ்தானீகர் கூறுகையில்,
வியாழக்கிழமை தொடங்கி நாளை சனிக்கிழமை வரை 3 நாட்கள் மங்கள சண்டி ஹோமம் நடைபெறுகிறது.3 நாட்களும் தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி 12.30மணிக்கு நிறைவு பெறும். வாழ்வில் ஏற்படும் தடைகள்,சாபங்கள் மற்றும் தீய சக்திகளை நீக்கி மங்கலம், ஆரோக்கியம், மன அமைதியும் கிடைக்க இந்த சண்டி ஹோமம் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.