Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் சின்னச்சாமி நகர் துர்க்கை அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா – பக்தர்கள் பால்க்குட ஊர்வலத்தில் ஈடுபட்டு வேண்டுதல் நிறைவேற்றம்

 

காஞ்சிபுரம் :


இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, பணாமுடீஸ்வரர் ஆலயத்திலிருந்து பலரும் பால்க்குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர், அவர்கள் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.


இதையடுத்து, கோவிலில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


மாலை நேரத்தில் துர்க்கை அம்மன் வீதியுலா நடைபெற்றது. கூழ்வார்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. திருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் சின்னச்சாமி நகர் பக்தர்கள் ஒழுங்காக செய்து இருந்தனர்.


Keywords/Labels :  Kanchipuram, Chinnasami Nagar, Durga Amman Temple, Aadi Festival, Milk Pot Procession, Devotees Offering, Aadi Velli, Street Procession, Hindu Rituals, Tamil Nadu Temple Festival

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.