Type Here to Get Search Results !

28-07-2025 அன்று அனைத்து பிரச்சனைகளும் தீர நாக சதுர்த்தி வழிபாடு



நாக சதுர்த்தி, நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் நாகங்கள் தொடர்புடைய தோஷங்களையும், பாம்புகளால் ஏற்படும் பிரச்சனைகள், வாழ்க்கையில் ஏற்படும் பயம் போன்றவற்றை நீக்கும் சிறப்பான வழிபாடு ஆகும். 

நாகங்களை வழிபடுவதால் நமக்க மட்டுமின்றி நம்முடைய சந்ததியினருக்கும் நாகங்களால் எந்த தோஷமும் ஏற்படாமல் பாதுகாக்கும். நாகரின் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் இந்த நாளில் வழிபடலாம்.


நாக சதுர்த்தி அன்று கண்டிப்பாக நாகங்களுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். நாக சதுர்த்தி அன்று பெண்கள் கோவிலும், வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும், நன்மைகள் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நாகங்களுக்குரிய மந்திரங்களை இந்த நாளில் சொல்லி வழிபடுவதும் சிறப்பான பலன்களை தரும்.




​நாக சதுர்த்தி சிறப்புகள்

​நாக சதுர்த்தி என்பது நாகர்கள் அவதரித்த நாளாகவும், காளிங்கன் என்ற பாம்பினை பகவான் கிருஷ்ணர் அடக்கிய நாளாகவும் கருதி கொண்டாடப்படுகிறது. நாக சதுர்த்தி அன்று நாகங்களை வழிபடுவதால் இந்த பிறவியில் நாமோ, நம்முடைய முன்னோர்களோ அல்லது முந்தைய பிறவிகளிலேயே நாம் நாக இனத்தை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது தீங்கு விளைவித்து இருந்தால் அதனால் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் ஆகியவை நீங்கும். 

பயம், நோய், ஆபத்துக்கள் நீங்கும். திருமண தடை, குழந்தை பேறு பெறுவதில் தடை, புத்திர தோஷம், ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் ஆகியவை நீங்கும். உலகத்தில் உள்ள அனைத்து நாகங்களையும் திருப்திப்படுத்தும் தினமே நாக சதர்த்தி தினமாகும்.


நாக சதுர்த்தி அறிமுகம்

சாவான் அல்லது ஷ்ரவண மாதத்தில் (ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை) வளர்பிறை சந்திரனின் 4வது நாள் (சுக்ல பக்ஷம்) நாக சதுர்த்தி (நகுல சவிதி) என்று கொண்டாடப்படுகிறது, மேலும் இது நாக பஞ்சமிக்கு முந்தைய நாளாகும். நாகம் என்றால் பாம்பு என்றும் சதுர்த்தி என்றால் சந்திர மாதத்தின் 4வது நாள் என்றும் பொருள். 

இருப்பினும், சில மாநிலங்கள் தீபாவளிக்குப் பிறகு வரும் தமிழ் மாதமான கார்த்திகையில் (நவம்பர் நடுப்பகுதி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை) வளர்பிறை சந்திரனின் 4வது நாளில் நாக சதுர்த்தியைக் கடைப்பிடிக்கின்றன.


​நாக சதுர்த்தி 2025 வழிபாட்டு நேரம்

இந்த ஆண்டு நாக சதுர்த்தி ஜூலை 28ம் தேதி திங்கட்கிழமை வருகிறது.  அந்த நாள் முழுவதும் சதுர்த்தி திதி உள்ளது.  ராகு கால நேரத்தில் நாகர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். ராகு கால நேரம் காலை 07.31 மணி முதல் 09.06 வரை. அபிஜித் காலம்  காலை 11:50 முதல்12:40 வரை.


 நாக சதுர்த்தி வழிபாடு 

நாக சதுர்த்தி அன்று பெண்கள் காலையில் எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்கிருக்கும் நாகர் உருவத்திற்கு முதலில் உங்கள் கைகளால் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு பால் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அதிகமாக முடியாவிட்டாலும் இரண்டு ஸ்பூன் அளவிற்காவது பால் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இது நாகங்களை சாந்திப்படுத்தும். 

பிறகு நாகத்தை நன்கு துடைத்து விட்டு மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, பஞ்சினை முறுக்கி மாலை போல் செய்து, அதில் சிறிதளவு இடைவெளி விட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, இந்த மாலையை நாகத்திற்கு அணிவிக்க வேண்டும். 

அதோடு வாசனை மலர்களை சாற்ற வேண்டும். மல்லிகைப்பூவை மாலை போல் அணிவிப்பத சிறப்பானது. வீட்டில் இருந்து பால்பாயசம் செய்து எடுத்துச் சென்று நைவேத்தியமாக படைத்து விட்டு, வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிடலாம்.


வீட்டில் வழிபடும் முறை 

வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களில் நாகர் உருவம் கிடையாது என்பவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டினை செய்யலாம். வீட்டில் நாகர் உருவம் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். அப்படி இல்லை என்றால் சிவன், பெருமாள், அம்பாள், விநாயகர் ஆகிய தெய்வங்களின் உருவங்களில் இருக்கும் நாகாபரணத்திற்கு மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, தீபாரதனை காட்டி வழிபடலாம். 

பால்பாயசம் நைவேத்தியமாக செய்து படைத்து வழிபடலாம். "எங்களுடைய குலத்தில் யாராவது நாக குலத்திற்கு எப்போதாவது தீங்கு ஏற்படுத்தி இருந்தால் அதை மன்னித்து, எங்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்" என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.


சொல்ல வேண்டிய மந்திரங்கள்

நாக சதுர்த்தி வழிபாடு செய்யும் போது நாகங்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம்.


1. நாகர் மகா மந்திரம் :

ஓம் அனந்தம் வாஸூகிம்

சேட்சம் பத்மநாபம்

ஸகம்பலம் ஸங்கபாலம்

த்ருதராஷ்டிரம்: தட்சகம்

காளியம்ததா: ஏதானி நவ

நாமானி சமகாத்மனாம்

சாயங்காலே படேநித்யம்

ப்ராதாகாரல விசேஷதக

நஸ்யவிஷ பயம் நாஸ்தி

ஸர்வத்ர விஜயூபவேத்


2. ஸ்ரீ நாகராஜ காயத்ரி

ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே

நாகமணி சேகராய தீமஹி

தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்


3. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் ஐம் மானசா தேவியே நமஹ

4. ஓம் நாகராஜாய நமஹ

5. ஓம் ஆதிசேஷாய நமஹ

6. ஓம் வாசுகியே நமஹ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.