காஞ்சிபுரம், ஜூலை 22:
காஞ்சிபுரம் ஆலடிப் பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ளது ஆகாய கன்னியம்மன் ஆலயம். இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலையில் காப்புக்கட்டுதலும், சிறப்பு அபிஷேகமும் அதனையடுத்து உரணிப்பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
பின்னர் உற்சவர் ஆகாய கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கும்பப் படையல் இடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை செங்குந்த அமைப்புக் குழுவின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
#ஆகாயகன்னியம்மன் #ஆடித்திருவிழா #காஞ்சிபுரம் #வீதியுலா #தீபாராதனை #தமிழ்நாட்டுக்கோயில்கள் #அம்மன்திருவிழா #AkayaKanniammanFestival2025 #KanchipuramFestivals