Type Here to Get Search Results !

உத்தரமேரூர் துர்க்கையம்மன் கோயிலில் ஆடித்திருவிழா - சிம்ம வாகனத்தில் வீதியுலா



காஞ்சிபுரம், ஜூலை 30:


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ள வடவாயிற் செல்வி துர்க்கையம்மன் கோயிலில் புதன்கிழமை ஆடித்திருவிழாவையொட்டி உற்சவர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள பழமையான கோயில் வடவாயிற் செல்வி துர்க்கையம்மன் ஆலயம்.இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி காலையில் ஜலம் திரட்டும் நிகழ்ச்சியும்,மதியம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து உற்சவர் துர்க்கையம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


இரவு மகா தீபாராதனையும் நடைபெற்றது.ஏற்பாடுகளை துர்க்கையம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர், மகளிர் வார வழிபாட்டுக் குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.


Aadi Festival Celebrated at Uthiramerur Durga Temple with Simha Vahanam Procession and Maha Deeparadhanai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.