காஞ்சிபுரம், ஆக.16:
காஞ்சிபுரம் ஓபிகே புதுத்தெருவில் அமைந்துள்ள து வேணுகோபால சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மூலவர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு தீர்த்தமும்,அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது.
மூலவரும்,உற்சவரும் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.