Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி கோவிலில் ஆடி வெள்ளி: 108 பெண்கள் திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் சேவை





காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஆதி காமாக்ஷி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் ஆடி வெள்ளி ஒட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

மேலும் 108 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேண்டி 108 தீப விளக்கு ஏற்றி வழிபாடு



பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள,  ஸ்ரீ ஆதி காமாட்சி கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீ ஆதி காமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் திருக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி 108 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. 



திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் நிகழ்ச்சியில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.



திருவிளக்கு பூஜை ஒட்டி ஆதி பீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, லட்சுமி,சரஸ்வதி, தேவிகளுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து  பின் திருக்கோவில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.  


சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுதருளில் ஆதி காமாட்சி அம்மன்  ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


On Aadi Velli, 108 women lit lamps for world welfare at Sri Aadi Kamatchi Adipeeta Parameswari Kalikambal Temple in Kanchipuram, followed by special rituals and Oonjal Seva.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.