Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் ஆடித் திருவிழா



காஞ்சிபுரம்,  ஆக. 8:


காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள புதுப்பாளையம் தெருவில் அமைந்துள்ள கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவர் கருக்கினில் அமர்ந்தவள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். விழாவில் மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Aadi Festival Celebrated at Karukinil Amarndhaval Temple in Kanchipuram

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.