காஞ்சிபுரம், ஆக.8:
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரத தினத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் விஸ்வரூப தரிசனம் ஆகியன நடைபெற்றது.
மாலையில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
வரலட்சுமி விரத நாளையொட்டி ஆலயம் வந்திருந்த பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.