Type Here to Get Search Results !

காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் ஆடி மாத கருட சேவை - கஜேந்திர மோட்ச உற்சவம்


காஞ்சிபுரம், ஆக.9:


காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ஆடி மாத கருட சேவையையொட்டி உற்சவர் வரதராஜசுவாமி தங்கக் கருட வாகனத்தில் சனிக்கிழமை எழுந்தருளி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் கஜேந்திர மோட்ச உற்சவம் நடைபெற்றது.


அத்திவரதர் புகழுக்குரியதும்,108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் இருந்து வரும் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் உற்சவர் வரதராஜசுவாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி கஜேந்திர மோட்ச உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.


நிகழாண்டு ஆடி மாதத்தையொட்டி உற்சவர் வரதராஜசுவாமி கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்திலிருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அங்கிருந்து தங்கக்கருட வாகனத்தில் தங்க, வைர ஆபரணங்களும், மலர் மாலைகளும் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளி கஜேந்திர மோட்ச உற்சவம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னர் கோயில் வளாகத்தில் ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் ஆலயத்துக்கு எழுந்தருளினார்.


வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும், கோவிந்தா, கோவிந்தா என்றும் பெருமாளை வரேவற்று தரிசனம் செய்தனர்.


ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.


At the Varadaraja Perumal Temple in Kanchipuram, the annual Aadi Garuda Sevai and Gajendra Moksha Utsavam were celebrated with the deity in a golden Garuda Vahanam, followed by special rituals and a grand procession, drawing large crowds of devotees.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.