காஞ்சிபுரம், ஆக.10:
பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் கோயில் 50 வது ஆண்டு ஆடித்திருவிழா இம்மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி தினசரி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தினசரி இரவு ஆலய வளாகத்தில் உள்ள வாரியார் அரங்கத்தில் தினசரி வெவ்வேறு கலைநிகழ்ச்சிகள்,பட்டி மன்றங்கள் ஆகியனவும் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.இலக்குமணன் சொல்லைக் கேட்காத சீதை குற்றவாளியே என்ற தலைப்பில் புலவர் தி.பழனிச்சாமி தலைமையில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.