காஞ்சிபுரம், ஆக.10:
காஞ்சிபுரம் அருகே வையாவூர் சாலையில் அமைந்துள்ளது புத்தர் ஆலயம்.இங்கு ஆடி மாத பௌர்ணமி தினத்தையொட்டி புத்தர் சிலை முன்பாக திரளான பக்தர்கள் பலரும் அமர்ந்து பாலி மொழியில் புத்த பூஜை செய்து வழிபட்டனர்.
பக்தர்களில் பலரும் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்து விளக்கேற்றினர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.