காஞ்சிபுரம், செப்.23:
📌 ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை... 1,763 காலி பணியிடங்கள் – உடவே விண்ணப்பிக்கலாம்!
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் நவராத்திரித் திருவிழா சங்கர மடத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
2 வது நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை உலக மக்கள் நன்மைக்காகவும், அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழவும் 108 சுமங்கலிகள் மற்றும் 108 குழந்தைகளுக்கான கன்னிகா பூஜை ஆகியனவும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
பூஜைகளை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர்கள் செய்தனர்.சங்கர மடத்தின் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், நிர்வாகி கீர்த்தி வாசன், கோயில் மணியக்காரர் சூரியநாராயணன் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.