காலை ஆரம்பத்தில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சாரதா நவராத்திரி கொலு மண்டபத்தில், உற்சவர் காளிகாம்பாள், லட்சுமி, சரஸ்வதி மூவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். கோயில் அர்ச்சகர் சதீஷ்குருக்கள் தீபாராதனை தொடங்கிய உடன், பெண்கள் தீபமேற்றி விளக்கு பூஜையை தொடங்கினர்.