படவிளக்கம்: காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் நவராரத்திரி விழாவின் முன்னோட்டமாக நடைபெற்ற கணபதி ஹோமம்
காஞ்சிபுரம், செப்.21:
பெரியகாஞ்சிபுரத்தில் ஜவஹர்லால் தெருவில் 51 சக்தி பீடங்களில் ஐங்கார பீடமாகவும்,ஒட்டியான பீடமாகவும் இருந்து வருவது ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில்.இக்கோயிலில் சாரதா நவராத்திரி திருவிழாவின் தொடக்கமாக கணபதி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. மாலையில் விநாயகர் உற்சவமும் நடைபெற்றது.
வரும் 24 ஆம் தேதி விஸ்வகர்ம ஜெயந்தி விழாவும்,வரும் 30 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் நடைபெறுகிறது.
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை விஜயதசமியையொட்டி மாலையில் உற்சவர் காளிகாம்பாள் குதிரை வாகனத்தில் பாரிவேட்டை உற்சவமும், வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகிறது.
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி பூப்பல்லக்கில் காளிகாம்பாள் வீதியுலா வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.