ஓசூர் :
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு கேது ப்ரீத்தி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோயிலில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் பிரம்மாண்ட வேள்விக் குண்டத்தில் மிளகாய் வத்தலை செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
யாகத்தில் மகா பூரண ஆஹூதி சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின் மூலவர் ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து அருள் பாலித்தார்.
அம்மனுக்கு பஞ்சமுக தீப மங்கள ஆரத்தி நடைபெற்றது. மேலும், கோயிலில் உள்ள தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகாகாலபைரவர், ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது பகவான்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
.png)