Type Here to Get Search Results !

விருத்தாசலத்தில் பன்னிரு கருட சேவை ஊர்வலம் விழா


விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பன்னிரு கருட சேவை ஊர்வலம் இவ்வாண்டும் சிறப்புடன் நடைபெற்றது. 


இந்த ஆண்டு 25-வது ஆண்டு விழாவாகும் இந்த ஊர்வலத்தில் விருத்தாசலத்திலிருந்து அருகிலுள்ள 28 கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளியபடி ஊர்வலமாக வந்தனர்.



ஊர்வல பாதை:

விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கி, கடைவீதி, சன்னதி வீதி, தென்கோட்டை வீதி மற்றும் மேற்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலம் வலம் வந்தது.

பங்கேற்பு:

ஏராளமான பக்தர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு, பெருமாளின் தரிசனம் செய்தனர். விருத்தாசலத்தில் உள்ள வரதராஜ பெருமாள், பட்டாபிராம பெருமாள், ராஜகோபால சுவாமி, ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட கோவில்களின் இசை குழுக்கள் ஊர்வலத்தில் மேளதாளம் இசைத்து, விழாவை சிறப்பித்து வைத்தனர்.

 

செய்தியாளர்: R. காமராஜ் - 9080215691
ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் - 8072117545

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.