காஞ்சிபுரம், நவ.10:
சின்னக்காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையார் கோயில் தெருவவில் அமைந்துள்ள பாலதர்ம சாஸ்தா ஆலயத்தின் திருவிழா இம்மாதம் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 4 வது நாள் நிகழ்வாக காலையில் பாலதர்மசாஸ்தாவுக்கு பஞ்சகவ்ய அபிஷேகமும்,பின்னர் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மீனாட்சிக்கும்,சுந்தரேசுவரருக்கும் ஆகம விதிகளின்படி திருமணம் நடைபெற்றது.
திருக்கல் யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மாலையில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியும்,சுந்தரேசுவரரும் திருமணக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பாலதர்மசாஸ்தாவுக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், மாலையில் ஐயப்ப சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பாலதர்ம சாஸ்தா ஆலய அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.செந்தில் தலைமையிலான விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்.png)