காஞ்சிபுரம், நவ.5:
ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் உள்ள காமாட்சி சமேத வேதவன்னீசுவரர் ஆலயத்தில் பழங்கள், காய்கறிகள் மற்றும் அன்னதால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
செவிலிமேடு சிவாலயம், களக்காட்டூர் அக்னீசுவரர்,
பிள்ளையார் பாளையம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் உள்ள ருத்ரகோடீஸ்வரர், கச்சபேசுவரர், மேலச்சேரி லலிதாம்பிகை சமேத வேத புரீஸ்வரர், அறம் வளத்தீஸ்வரர், முத்தீஸ்வரர், வழக்கறுத்தீசுவரர் உட்பட பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவுப் பற்றாக்குறை வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக வேதவன்னீசுசவர் கோயில் பூஜகர் லோகநாதன் தெரிவித்தார்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
.png)