Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் பாலதர்மசாஸ்தா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


காஞ்சிபுரம், நவ.7:


காஞ்சிபுரம் மாநகரில் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் ஆகாய  கன்னியம்மன் கோயில் அருகில் உள்ள பாலதர்மசாஸ்தா கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சின்னக்காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ளது பாலதர்ம சாஸ்தா ஆலயம். இக்கோயில் 8 வது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியதையொட்டி காலையில் ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடிமர அபிஷேகம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது.


பின்னர் பகவான் பாண்டுரெங்கன் குருசாமி,ஏஎஸ்பி பன்னக சயனம் குருசாமி ஆகியோரால் கொடியேற்றப்பட்டு சிறப்பு  தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் கற்பக விநாயகர் திருக்கல்யாண வைபவமும்,  அதனைத் தொடர்ந்து கற்பக விநாயகர் தீருவீதியுலாவும் நடைபெற்றது.


கொடியேற்ற விழாவில் பாலதர்மசாஸ்தா அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.செந்தில், துணைத் தலைவர் ஜெ.அருள் குமரன்,செயலாளர் எஸ்.ஜெயராஜ்,பொருளாளர் டி.சுதாகர்,ஆலய குருசாமி கே.சண்முகம் ஆகியோர் உட்பட திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


இன்று சனிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.


ஞாயிற்றுக்கிழமை புதிதாக செய்யப்பட்ட வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஐம்பொன்சிலைகளுக்கு கும்பாபிஷேகமும், திருக்கல்யாண திருக்கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலாவும் நடைபெறுகிறது.


நவ.10 ஆம் தேதி திங்கள்கிழமை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் இரவு வீதியுலாவும்,மறுநாள் செவ்வாய்க் கிழமை பாலதர்மசாஸ்தாவுக்கு 1008 சகஸ்ர நாம அர்ச்சனையும், இரவு சிறப்பு அலங்காரத்துடன்  வீதியுலாவும் நடைபெறுகிறது.


விழா ஏற்பாடுகளை பாலதர்ம சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.