காஞ்சிபுரம், நவ.23:
பெருமாள் ஆமை வடிவில் சிவபெருமான வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பாள் சமேத கச்சபேசுவரர் கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் வரும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் மாவிளக்கினை மண்சட்டியில் ஏற்றி ஆலயத்தை வலம் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனால் தலையில் ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.நிகழாண்டு கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஏராளமான பெண்கள், குழந்தைகள் பலரும் மண்சட்டியில் வெல்லம், பச்சரிசி மாவு வைத்து அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி தலையில் சுமந்தவாறு ஆலயத்தை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பின்னர் மூலவர் கச்சபேசுவரரையும் தரிசித்தனர்.திரளான பக்தர்கள் வருகையையொட்டி சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீஸôரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.png)