காஞ்சிபுரம், நவ.23:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் அமைந்துள்ளது நாகவல்லி அம்மன் கோயில். இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கு புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைக்கப்பட்டு யாகவேள்விகள் நடத்தப்பட்டன.
புதுவை சுத்தாத்வீத சைவ திருமடம் குரு முதல்வர் வாமதேவ சிவம்குமாரசுவாமி தேசிகர் பராமாச்சாரிய சுவாமிகள் திருக்குட நன்னீராட்டு விழாவை தூய தமிழில் நடத்தினார்.
இதனையடுத்து மூலவர் நாகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் ஆலய நிர்வாகிகள்,தெருவாசிகள் இணைந்து செய்திருந்தனர்.
.png)