காஞ்சிபுரம், நவ.8:
காஞ்சிபுரம் பாலதர்மசாஸ்தா கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண மும்,திருமணக்கோலத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது.
சின்னக்காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதர்மசாஸ்தா ஆலயத்தின் திருவிழாக் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2 வது நாளாக சனிக்கிழமை ஆலயத்துக்கென புதியதாக செய்யப்பட்ட வள்ளி,தெய்வானை மற்றும் சுப்பிரமணியர் ஐம்பொன்சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தது.
மாலையில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் ஆகம விதிகளிந் படி நடைபெற்றது.
திருக்கல்யாண விழாவில் பாலதர்மசாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பகதர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பெருமாள் நாக வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததுடன் வீதியுலாவும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுப்பிரமணியர் திருக்கல்யாணமும், மறுநாள் 10 ஆம் தேதி திங்கள் கிழமை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலையில் பாலதர்மசாஸ்தா சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது.
.png)