Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் சக்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்


காஞ்சிபுரம், நவ.30:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் அமைந்துள்ளது பழமையான சக்தி விநாயகர் கோயில். இக்கோயில் கும்பாபிஷேககத்திற்காக புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை ஏகாம்பரநாதர் கோயில் பூஜகர் ரவிச்சந்திர குருக்கள் தலைமையில் தொடங்கியது.



கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மகாபூரணாகுதி தீபாராதனைக்குப்பின்னர் புனிதநீர்க்கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து கோயில் பூஜகர் பி.பாண்டியன் அவர்களால் சக்திவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. 


தொடர்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பம்பை, உடுக்கை, காவடி மற்றும் கைச்சிலம்பாட்ட கலைஞர்கள் சங்கம் சார்பில் கைச்சிலம்பாட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


  .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.