மங்கலம்பேட்டை, நவம்பர் 2:
மங்கலம்பேட்டை ஸ்ரீ ஆதிசக்தி பீடம் ஆன்மிகக் குழுவின் சார்பில் புறவழிச்சாலையில் அமைக்கப்படும் திருக்கோயிலில், உலகிலேயே மிக உயரமான 18 அடி விஸ்வரூப அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த மகத்தான சிலையின் கருகோல விழா மார்ச் 3ஆம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆதிசக்தி பீடத்தில் துர்க்கை அம்மன் திருவுரு ஆலய நிரந்தர பீடத்தில் நிறுவும் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுந்தரமுருகன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி சிறப்பு யாக பூஜைகள் நடத்தினர். நிகழ்வில் மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து மகிழ்ந்தனர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
இந்த புதிய திருக்கோயில் மற்றும் அற்புதமான 18 அடி உயர துர்க்கை அம்மன் சிலை, மங்கலம்பேட்டை பகுதியில் ஆன்மிகப் பெருமை சேர்த்துள்ளது.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
.png)
