Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரர் திருக்கோயிலில் இராண்டம் நாள் தெப்பல் திருவிழா..



காஞ்சிபுரம்: 

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது, பெருமாள்  ஆமை வடிவத்தில் வந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலமாகவும், தலை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் பரிகார தலமாக உள்ளது ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை ஶ்ரீ கச்சபேசுவரர் திருக்கோயிலில். இத்திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் கோவில் திருக்குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



அந்த வகையில் கார்த்திகை மாத இரண்டாம் நாள் தெப்பல் திருவிழாவை முன்னிட்டு கச்சபேஸ்வரருக்கும், சுந்தராம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சாமந்தி பூ மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் தூப, தீப ஆராதனைகள் செய்து மேளதாள பேண்ட் வாத்தியங்கள் முழங்க சிவ வாத்தியங்கள் ஒலிக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் உள்ள  இஷ்ட சித்தி தீர்த்த திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளச் செய்தனர்.



பின்னர் இராண்டம் நாளாளில் ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத ஶ்ரீ கச்சபேஸ்வரர் எழுந்தருளிய தெப்ப குளத்தில் 7 சுற்றுகள் வலம் வரச் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



தெப்பத் திருவிழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். தெப்பத் திருவிழாவின் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. 



தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் விழா குழுவினரும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் உபயதாரராக செந்தில்குமார் முதலியார் தனது குடும்பத்தாருடன் தெப்ப உற்சவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத ஶ்ரீ கச்சபேஸ்வரரை வழிபட்டனர். 


மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் ஏராளமான போலீசாரும், தீயணைப்புத் துறையு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.