Type Here to Get Search Results !

அய்யங்கார்குளம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்


காஞ்சிபுரம், டிச.15:

காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யங்கார்குளத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3 வது ஆண்டு நிறைவையொட்டி 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அய்யங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது மகாலட்சுமி கோயில். 


இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் 108 வலம்புரச்சங்குகளால் சங்காபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது.

மாலையில் பெண்கள் குத்துவிளக்கேற்றி மலர்களாலும்,மஞ்சள் மற்றும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ம.எ.தில்லைநாயகம் செய்திருந்தார்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.