காஞ்சிபுரம்,டிச.19:
சின்னக்காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் திருவள்ளுவர் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், வெண்ணெய்க்காப்பு அலங்காரம்,மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்துக்குளம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேசுவரர் ஆலயத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக்குழு மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் அருகே அய்யங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவிராயர் கோயிலில் மூலவருக்கு வெண்ணெய்க் காப்பும்,சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர்,தேரடி ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.திரளான பக்தர்களும் ஆஞ்சநேயரை தரிசித்தனர்.
.png)