வீட்டில் செல்வ செழிப்பையும் கொண்டு வர விநாயகர் சிலையை வைக்கும்போது அனைத்து வாஸ்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது அவசியம்.
உதாரணமாக, இடதுபுறம் பார்த்தபடி விநாயகர் சிலை வாஸ்து விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இது நமது வாஸ்து தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கிறது.
வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் திருஷ்டி விநாயகர் வீட்டில் கெட்ட சக்திகளை அண்டவிடாமல் தடுக்கிறது.
அந்தவகையில், எந்த விநாயகர் சிலையை வீட்டில் எப்படி வைத்தால் செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை விநாயகர்
வெள்ளை விநாயகர் அதிக செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறார் என்று நம்பப்படுகிறது. வெள்ளை விநாயகர் கொண்ட ஒரு படத்தை ஒட்டுவது கூட பல அதிசயங்களைச் செய்யலாம். இருப்பினும், தெய்வத்தின் பின்புறம் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்தப்படி இருக்க வேண்டியது அவசியம்.
சிறந்த திசை
விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலையில் கூட விநாயகர் சிலை வைக்கலாம். வடகிழக்கு மூலை கிடைக்கவில்லை என்றால், பிரார்த்தனை செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஒரு சிலையை வைத்து வழிபடலாம்.
விநாகர் சிலை ஒருபோதும் தெற்கு திசையில் மட்டும் வைக்கவே கூடாது. மேலும், சிலை பாத்ரூமிற்கு அருகில் அல்லது பாத்ரூம் இணைக்கப்பட்ட சுவர் அருகிலும் வைக்க கூடாது. எனவே, சிலை வைக்கும்போது அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
படுக்கையறையில் ஒருபோதும் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது. ஒருவேளை நீங்கள் காலை எழுந்ததும் விநாயகர் முகத்தில் விழிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு விநாயகர் படத்தை வாங்கி வடகிழக்கு திசையில் வைத்துக் கொள்ளலாம். மேலும், வாஸ்து படி பாதங்கள் சிலையை பார்த்தப்படி இருக்க கூடாது.
திருஷ்டி விநாயகர் சிலை வைக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
உங்கள் வீட்டில் அல்லது அலுவலக இடத்தில் பல வழிகளில் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று உங்கள் வீட்டின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே விநாயக மூர்த்தியை வைப்பது.
ஆனால், அந்த விநாயகர் சிலைகளை எப்போதும் ஜோடியாக தான் வைக்க வேண்டும். மேலும், அந்த சிலையின் பின்புறம் உள்ள மற்ற அறையில் வேறு எந்த படங்களையும் வைக்கக் கூடாது.
எப்போதும், இடது பக்க தந்தம் கொண்ட விநாயகர் சிலையை தான் வீட்டில் வைக்க வேண்டும். ஏனெனில், வலது பக்க தந்தம் கொண்ட விநாயகரை வீட்டில் வைத்திருக்கும் போது அதிக அக்கறையும் கவனமும் தேவை. அதனால்தான், அந்த சிலைகள் கோவில்களில் மட்டுமே காணப்படுகின்றன.
சிலையின் வகைகள்
மா, அரச, வேப்ப மரங்களால் ஆன விநாயகர் சிலைகள் நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், துக்கத்தைப் போக்கவும் நல்ல அதிர்வுகளை ஈர்க்கவும் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிலைகள் மிகவும் அதிர்ஷ்டமானவை என்று வாஸ்து வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும், படிகச் சிலைகள் அனைத்து வாஸ்து தோஷங்களையும் நீக்கி, வாழ்க்கையை உடனடியாக மாற்றும் என நம்பப்படுகிறது. இருப்பினும், மஞ்சள் சிலைகள் மிகவும் மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.
வீட்டில் வைக்கும் சிலைக்கு முன்பாக வைக்கப்படும் சிறிதளவு அரிசி கூட ஒரு பெரிய பிரசாதமாக கருதப்படுகிறது. எனவே, உயரமான இடத்தில் சிலையை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு அரிசி வையுங்கள்.