காஞ்சிபுரம்,டிச.21:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் சீதாராம பஜனை மண்டலி சார்பில் 33 வது ஆண்டு ராதா கல்யாண மகோற்சவம நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வாக சனிக்கிழமை விக்னேசுவர பூஜை,விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்,குரு கீர்த்தனை, பஜனைகள் ஆகியன நடைபெற்றது.2 வது நாளாக ஞாயிற்றுக்கிழமை காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ராதா கல்யாண மகோற்சவம் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவமும்,அன்னதானமும் நடைபெற்றது.
ராதா கல்யாண மகோற்சவத்தையொட்டி கடயநல்லூர் ராஜகோபால பாகவதர் குழுவினரால் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை சீதாராம பஜனை மண்டலியின் தலைவர் வேணுகோபாலன்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பொருளாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
.png)