உறங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை, இயற்கையின் விடியலைக் காட்டி எழுப்புகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
'தோழியே! விடிந்துவிட்டதற்கான அடையாளங்கள் சூழ்ந்தும் நீ இன்னும் உறங்குவது ஏனோ? இதோ... பறவைகள் கீச்சிடும் இனிய ஒலியும், கருட வாகனனான அந்த எம்பெருமான் கோயிலில் முழங்கும் வெண்சங்கின் பேரொலியும் உன் காதுகளில் விழவில்லையா?'
'தன்னைக் கொல்ல நஞ்சோடு வந்த அரக்கி பூதகிக்கு, பால் கொடுத்த ஒரே காரணத்திற்காகத் தாய்மை எனும் உயர்ந்த நிலையை அளித்து மோட்சம் தந்தவன் நம் கண்ணன். வஞ்சனையுடன் சக்கர வடிவில் வந்த சகடாசுரனைத் தன் காலால் உதைத்து அழித்த அந்த மாயவன்...'
'அந்தப் பரந்தாமனைத் தங்கள் இதயத்தில் இருத்தி, முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து சொல்லும் "ஹரி... ஹரி..." என்கிற மந்திரம் ஊரெங்கும் ஒலிக்கிறது. அந்தப் பேரொலி நம் உள்ளத்தைப் குளிர வைக்கிறது.
அன்புத் தோழியே! இத்தனை அற்புதங்கள் நிகழ்ந்தும் இன்னும் உறக்கம் ஏன்? உடனே எழுந்து வா... எம்பெருமானின் அருளைப் பெற்று உள்ளம் குளிரப் பாடுவோம்!'
"ஆண்டாள் நாச்சியார் காட்டிய பக்தி நெறியில் நாமும் இணைந்து பயணிப்போம்,
பூதகிக்கும் மோட்சம் அளித்த அந்த மாயவனின் கருணையைப் போற்றுவோம்!. 'ஸ்ரீ கிருஷ்ணா' (Sri Krishna) என கீழே கமெண்ட் செய்யுங்கள்! இறைவனின் அருளால் சிறப்பான நல்வாழ்வினைப் பெறுவோம்.
இந்த ஆன்மீகத் தேடல் தொடர, இப்போதே நமது @K24TamilAstro சேனலை சப்ஸ்கிரைப் செய்து, இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி, வணக்கம்!"
.png)
