காஞ்சிபுரம், டிச.9:
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். இக்கோயிலுக்கு கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பில் நடைபெற்று முடிந்ததையடுத்து யாகசாலை பூஜைகள் இம்மாதம் 4 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.திங்கள்கிழமை அதிகாலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
கும்பாபிஷேகத்தின் தொடர்ச்சியாக ஆலய வளாகத்தில் உள்ள உற்சவர் சந்நிதியில் ஏலவார்குழலி அம்பிகைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாணம் ஆகம விதிகளின் படி 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
முன்னதாக திருக்கல்யாண உற்சவத்திற்கு பெரிய காஞ்சிபுரம் வாணியர் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் ஏலவார் குழலி அம்பிகைக்கு சீர்வரிசைப் பொருட்களை மங்கல மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
திருக்கல்யாண வைபவத்தில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் சி.குமாரதுரை,உதவி ஆணையர்(ஓய்வு)லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி ,வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பின்னர் திருமணக்கோலத்தில் சுவாமி,அம்மன் உட்பட பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது.
கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழாவன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
.png)
