காஞ்சிபுரம் | மார்ச் 15, 2026
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா, ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழாவிற்கான பந்தல்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
பந்தல்கால் நடும் விழா:
பங்குனி மாதத் திருவிழாவினை முன்னிட்டு, ஆலயத்தின் நுழைவுவாயிலில் பந்தல்கால் நடப்பட்டது. முன்னதாக பந்தல்காலுக்குச் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி ராசி, துணைத் தலைவர் விஜயகுமாரி பரசுராமன் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழா அட்டவணை:
பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:
- மார்ச் 23: பிரமோற்சவ கொடியேற்றம் மற்றும் இரவு சிம்ம வாகன வீதியுலா.
- மார்ச் 27: இரவு தங்க ரிஷப வாகன உற்சவம்.
- மார்ச் 29: திருத்தேரோட்டம் (தேர் திருவிழா).‘
- ஏப்ரல் 01: தீர்த்தவாரி உற்சவம்.
- ஏப்ரல் 02: இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் - விழா நிறைவு.
தினசரி காலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவில் சுவாமி மற்றும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
ஏற்பாடுகள்:
விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பா. ராஜசேகரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திருவாலீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
.png)