Type Here to Get Search Results !

2. ரிஷபம் (Taurus) - சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2026 | லாப சனியால் பொற்காலம்!

 


வணக்கம் அன்பர்களே! இது உங்கள் Way 2 Astro.

ஆன்மிகமும் அறிவியலும் சங்கமிக்கும் ஒரே இடம்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அள்ளித்தரும் நீதிமான் சனி பகவான், வரும் 2026 ஜூலை 27-ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் ஒரு மணி 25 நிமிடத்திற்கு மீன ராசியில் தனது வக்ர பெயர்ச்சியைத் தொடங்குகிறார். அதாவது பின்னோக்கி நகரப் போகிறார்.

இந்த வக்ர நிலை வரும் டிசம்பர் 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை, மொத்தம் 138 நாட்களுக்கு நீடிக்கப் போகிறது.  

சனியின் இந்த அதிரடி மாற்றத்தால்.. ...ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கு! 

உங்க ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுல சனி பகவான் பின்னோக்கி நகர்றதுனால, நீங்க பல வருஷமா ஆசைப்பட்டு தள்ளிப்போன ஒரு பெரிய கனவு இந்த 138 நாட்களுக்குள் கண்டிப்பா நனவாகும்! 

வேலை செய்யுற இடத்துல நீங்க செய்யுற உழைப்புக்கு ஏத்த ப்ரொமோஷனும், பெரிய சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும். புதிய வேலை தேடிக்கிட்டு இருக்குற இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துல கௌரவமான வேலை அமைவதோடு, மூத்த சகோதரர் அல்லது அண்ணன் வழியில எதிர்பார்த்த ஆதாயங்கள் கைக்கு வந்து சேரும். 

சமூகத்துல உங்க அந்தஸ்து உயரும். ஆனா, புதுசா பெரிய அளவுல முதலீடுகள் செய்யும்போது மட்டும் அவசரப்படாம அனுபவசாலிகளோட ஆலோசனையைக் கேட்டு நிதானமா செயல்படுங்க. 

சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏத்துங்க!  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.