Type Here to Get Search Results !

ஆஞ்சநேயரின் அருளால் நினைத்தது நடக்கும் பொன்னான நாள்! - சனிக்கிழமை அஷ்ட யோகம் ரகசியம் என்ன? | ஆகஸ்ட் 1

சனிக்கிழமையான இன்று சனி பகவானின் அருளும் கிரக நிலவரங்களின் சுப பலன்களும் எந்தெந்த ராசிகளுக்கு அமையப் போகிறது? உத்தியோகம், வியாபாரம், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்போகும் ராசிகள் எவை? மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், நிறங்கள் மற்றும் திசைகள் இதோ!


12 ராசிகளின் விரிவான தினசரி பலன்கள் :

♈ மேஷம் - மதிப்பு உயரும் தெளிவான நாள்

மேஷ ராசி நேயர்களே, இன்று பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்குத் தெளிவான தீர்வுகள் கிடைக்கும். 

பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து வெற்றி காண்பீர்கள். 

வெளி வட்டாரங்களில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.

அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு | அதிர்ஷ்ட எண்: 6 | அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

நட்சத்திர பலன்: அஸ்வினி : அறிமுகம் ஏற்படும் | பரணி : ஆர்வம் அதிகரிக்கும் | கிருத்திகை : மரியாதை அதிகரிக்கும்

♉ ரிஷபம் - பொறுமையும் ஆதாயமும் கூடும் நாள்

ரிஷப ராசி நேயர்களே, இன்று மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். 

வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கிய நிமித்தமான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். 

அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தந்தை வழி உறவுகளால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு | அதிர்ஷ்ட எண்: 8 | அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

நட்சத்திர பலன்: கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும் | ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும் | மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்

♊ மிதுனம் - சுபகாரிய முன்னேற்றமும் லாபமும் தரும் நாள்

மிதுன ராசி நேயர்களே, இன்று வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்குப் பெரும்திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். 

நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் மனத்தெளிவுகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். 

இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். சுபகாரிய தொடர்பான செயல்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு | அதிர்ஷ்ட எண்: 7 | அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

நட்சத்திர பலன்: மிருகசீரிஷம் : திருப்தியான நாள் | திருவாதிரை : தெளிவுகள் உண்டாகும் | புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்

♋ கடகம் - விவேகமும் கவனமும் தேவைப்படும் நாள்

கடக ராசி நேயர்களே, இன்று உங்களின் விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். 

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். திடீர் செலவுகளால் நிதி நெருக்கடி ஏற்படலாம். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். 

நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய வீண் கருத்துக்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு | அதிர்ஷ்ட எண்: 3 | அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

நட்சத்திர பலன்: புனர்பூசம் : நம்பிக்கையை மேம்படுத்தும் | பூசம் : நெருக்கடியான நாள் | ஆயில்யம் : கருத்துக்களில் கவனம்

♌ சிம்மம் - சொத்து ஆதாயமும் புதிய கனவுகளும் தோன்றும் நாள்

சிம்ம ராசி நேயர்களே, இன்று எதிர்காலம் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். 

பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல ஆதாயம் உண்டாகும். பண விஷயங்களில் சிக்கனமாகச் செயல்படத் தொடங்குவீர்கள். வீட்டிற்கு உறவினர்களின் வருகை உண்டாகும். 

வியாபாரப் பணிகளில் சிறு அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் புதுவிதமான நல்ல கனவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு | அதிர்ஷ்ட எண்: 6 | அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

நட்சத்திர பலன்: மகம் : ஆதாயம் உண்டாகும் | பூரம் : அலைச்சல் ஏற்படும் | உத்திரம் : கனவுகள் பிறக்கும்

♍ கன்னி - காரிய அனுகூலமும் மகிழ்ச்சியும் தேடிவரும் நாள்

கன்னி ராசி நேயர்களே, இன்று நண்பர்கள் வழியில் சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் நன்மையே நடக்கும். 

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மற்றவர்களின் தேவைகளை தட்டாமல் நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் நல்ல மேன்மை ஏற்படும். 

உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு | அதிர்ஷ்ட எண்: 8 | அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நிறம்

நட்சத்திர பலன்: உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும் | அஸ்தம் : மேன்மை ஏற்படும் | சித்திரை : காரியங்கள் கைகூடும்

♎ துலாம் - தெளிவும் ஆன்மீக ஈடுபாடும் கூடும் நாள்

துலாம் ராசி நேயர்களே, இன்று உடன் இருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். 

புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். 

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் உண்டாகலாம். ஆன்மீக எண்ணங்கள் மனதில் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு | அதிர்ஷ்ட எண்: 5 | அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல் நிறம்

நட்சத்திர பலன்: சித்திரை : புதுமையான நாள் | சுவாதி : குழப்பங்கள் குறையும் | விசாகம் : விரயங்கள் உண்டாகும்

♏ விருச்சிகம் - பெரியோர் ஆதரவும் வழக்கில் வெற்றியும் தரும் நாள்

விருச்சிக ராசி நேயர்களே, இன்று பெரியோர்களின் ஆலோசனைகள் நல்மாற்றத்தை ஏற்படுத்தும். 

உங்களுக்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். 

வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை விலகி கவனம் கூடும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு | அதிர்ஷ்ட எண்: 3 | அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்

நட்சத்திர பலன்: விசாகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள் | அனுஷம் : சாதகமான நாள் | கேட்டை : ஆர்வமின்மை குறையும்

♐ தனுசு - முயற்சிகளில் வெற்றியும் சுபச் செய்தியும் கூடும் நாள்

தனுசு ராசி நேயர்களே, இன்று வாழ்நாளில் நினைவில் கொள்ளக்கூடிய சில சுப நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகப் பணிகளில் எடுத்த முயற்சிகள் கைகூடிவரும். 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் சற்று அலைச்சல் உண்டாகலாம். 

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மற்றவர்களுடன் பயனற்ற வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு | அதிர்ஷ்ட எண்: 7 | அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல நிறம்

நட்சத்திர பலன்: மூலம் : முயற்சிகள் கைகூடும் | பூராடம் : அலைச்சல் உண்டாகும் | உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்

♑ மகரம் - மனக்கசப்பு நீங்கி புதிய நம்பிக்கை பிறக்கும் நாள்

மகர ராசி நேயர்களே, இன்று நண்பர்களிடத்தில் இருந்த மனக்கசப்புகள் விலகும். 

உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்க்கமான முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

வியாபாரத்தில் பணவரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு | அதிர்ஷ்ட எண்: 8 | அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

நட்சத்திர பலன்: உத்திராடம் : பொலிவு மேம்படும் | திருவோணம் : அறிமுகம் ஏற்படும் | அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்

♒ கும்பம் - உதவிகள் கிடைத்து தெளிவு பிறக்கும் நாள்

கும்ப ராசி நேயர்களே, இன்று வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். 

கடன் சார்ந்த விவகாரங்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. கால்நடை பராமரிப்பில் கவனம் வேண்டும். 

தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிந்தனை போக்கில் மாற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு | அதிர்ஷ்ட எண்: 6 | அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

நட்சத்திர பலன்: அவிட்டம் : உதவிகள் சாதகமாகும் | சதயம் : செயல்களில் கவனம் | பூரட்டாதி : மாற்றமான நாள்

♓ மீனம் - நிதானமும் கவனமும் தேவைப்படும் நாள்

மீன ராசி நேயர்களே, இன்று அவசரமின்றி எதிலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். 

எதிர்பாராத சில செலவுகளால் சிறு நிதி நெருக்கடிகள் தோன்றி மறையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். 

மற்றவர்களைப் பற்றிய தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு | அதிர்ஷ்ட எண்: 5 | அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

நட்சத்திர பலன்: பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும் | உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும் | ரேவதி : குழப்பம் நீங்கும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.