Type Here to Get Search Results !

நியூமராலஜி இரகசியங்கள்


ஆயகலைகளில் நமது முனிவர்களும் மேலை நாட்டின் ஞானிகளும் உருவாக்கியதே இக்கலையாகும். வலது கண்ணாக ஜோதிடமும் இடது கண்ணாக நியூமராலஜியும் உள்ளது.

ஒருவருடைய பெயரில் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பே பெயர் எண்ணாகும்.

ஒருவருடைய பெயர் எண் 2 எண்ணைக்குறிக்கும் பெயர்கள் எல்லாம் வீண் சிக்கல்களையும், சிரமத்தையும் உண்டு பண்ணும். சிறிய வெற்றிக்குப் பின் பெரிய தோல்வியைத்தரும். 2 எண் சந்திரனைச் சார்ந்து 15 நாட்கள் வளமும் 15 நாட்கள் தேயும் வாழ்வில் நம் வாழ்க்கைத் தரமும் அப்படித்தான் இருக்கும். தேதி கூட்டு எண் 2 வரும் நாளில் திருமணம் கூட செய்யக் கூடாது.

     பெயர் எண் 4 எண்ணைக் குறிக்கும் பெயர்கள் எல்லாம் குடும்ப வாழ்வில் சிக்கல்களும், எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் தடைகளும் இருக்கும். குடும்பத்தில் எதிர்ப்புகளும் மன உபாதைகளும் வாட்டும். 4 எண் ராகுவைச் சார்ந்தது, விஷ தோஷமுள்ளது. தலை மனிதன், உடல் பாம்பு, குழுறுபடியானது. 4 வரும் தேதி, கூட்டு எண்ணில் திருமணம் கூட செய்யக்கூடாது.

     பெயர் எண் 7 எண்ணைக் குறிக்கும் பெயர்கள் எல்லாம் மனக்குழப்பத்தையும், காரியத்தடைகளையும் தரும். எக்காரியமும் முடிவடையாமல் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும் மனோபலம், புத்திதடுமாற்றத்தைக் கொடுக்கும், துரதிஷ்டங்கள் நிகழும். 7 எண் கோதுவைச் சார்ந்தது. தலையிலே பாம்பும், உடலிலே மனிதனும் கலந்த குழப்ப எண்ணாகும். 7 இவற்றிலும் திருமணம் செய்ய கூடாது.

     பெயர் எண் 8 எண்ணைக் குறிக்கும் பெயர்கள் எல்லாம் வீண்கலகமும், தொழில் முடக்கமும், நிலையற்ற வாழ்க்கையை தரும், தீய செயல்கள் ஆட்டிப்படைக்கும். 8 எண்ணில் அதிர்ஷ்டம் வந்தால் அது நேர்மைக்கும் புறம்பான தீய வழியில் சேரும் செல்வமாகத்தான் இருக்கும். 8 எண் இருபுறமும் 0 வரும் முடச்சனியைச்சார்ந்தது. இந்த எண்ணிலும் திருமணம் செய்ய கூடாது.

     பெயர் 2, 4, 7, 8 வரும் எண்களைக் கொண்ட பெயர்கள் எல்லாமே துரதிர்ஷ்ட வகையைச் சார்ந்தது. இவ்வகையான எண்ணில் பெயர்கள் உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

     பெயர் மட்டும் நன்கு அமையப் பெற்றவருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். மனிதனுக்கு முதல் தேவை உடல் ஆரோக்யம், இரண்டாவது வருமானத்தைத் தரக்கூடிய தொழில். மூன்றாவதாக குடும்பத்தைக் காக்க நல்ல மனைவி (அ) கணவன், நான்காவதாக குலப்பெருமையை நிலைநாட்ட நல்ல வாரிசுகள் இவை அனைத்தும் அதிர்ஷ்டப் பெயர் உள்ளவர்களுக்கும், அதிஷ்ட தேதியில் திருமணம் செய்தவர்களுக்கும் கிடைக்கும். ஜாதகம், நியூமராலஜி இரண்டும் வைத்தே அதிர்ஷ்டப் பெயரும் அதிர்ஷ்டதேதியும் அமைக்கப்பட வேண்டும். 

குழந்தைகளுக்கு பிறந்தவுடனே இந்த அதிஷ்டப்பெயர் சூட்டுவதால் மிகச்சிறந்த அதிஷ்டசாலிகளாவார்கள். புகழ், செல்வம், வெற்றியைப் பெறுவார்கள் வயதான காலத்திலுள்ளவர்களும் அதிஷ்டப் பெயராக மாற்றம் செய்தால் அவ்வயதிற்கேற்ப அதிஷ்டப்பலன் விருத்தியடையும்.

அதிஷ்ட நிறமுள்ள கார், பைக், ஸ்கூட்டர் எண்கள் போன்றவற்றில் செல்லும்போது கூட வாகன விபத்தை அதிர்ஷ்ட எண் தடுக்கிறது. வரப்போகும் பெரிய ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுகிறது. அதிர்ஷ்ட நிறமுள்ள அதிர்ஷ்ட எண்ணுள்ள தனக்கு சாதகமான வாகனத்தில் முக்கிய காரணம் குறித்து பிரயாணம் செய்யும் போது காரியம் மிக விரைவில் முடியும், நன்மை தரும்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.