1. சுக்ரனும் ராகுவும் 11ல் இரண்டு மனைவி. 7ல் குரு காதல் திருமணம் செய்யவைப்பார்.
2. லக்னத்திற்கு 3, 7, 11ல் ஏதேனும் ஒன்றில் ராகு அல்லது சூரியன் இருந்தால் காதல் திருமணம்தான் நடக்கும்.
திருமணம்
3. 7ல் செவ்வாய் இருந்தால் சில நற்பலன்களும், தீய பலன்களும் உண்டு. அன்பு உள்ளவராகவும், துணிவு உள்ளவராகவும், சிற்றின்ப நாட்டம் உள்ளவராகவும் திகழக்கூடும். ஆனால், இந்த செவ்வாய் திருமண காலத்தை தாமதப்படுத்துவார்.
4. 7ல் புதன் புத்திசாலியான வாழ்க்கைதுணை அமைய கூடும், ஆனால் மனம்விட்டு பேசும் சுபாவம். மனதில் அல்லது உடலில் வலிமை என்பது குறைந்திருக்கும்.
5. 7ல் குரு திருமண காலம் தாமதப்படுத்துவார். ஆனால் பெருந்தன்யும், நல்ல நோக்கங்களும் நிறைந்த மகிழ்ச்சி உண்டாகும் ஆனால் இங்கே குரு காதல் மணமும் புரிய வைப்பார்.
6. 7ல் சுக்ரன் இருந்தால் ஜாதகருக்கு பிரியமுள்ள துணை வந்து சேரும். அவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும் விளங்குவார்கள், வாழ்க்கையில் நல்ல பிடிப்பு இருக்கும்.
7. 7ல் சனி திருமணத்திற்கு காலதாமதமாகும். ஜாதகருக்கு ஒழுக்கமுறைபாடு உண்டாகும். சரீர குறைபாடு ஏற்ப்படும் ஆனால் செல்வ செழிப்புக்கு குறை இருக்காது.
8. 7ல் ராகு (அ) கேது இருந்தால் கணவன், மணைவி பிரிவு ஏற்ப்படக்கூடும். குறிப்பாக கணவன் (அ) மனைவிக்கு மனநலம், உடல்நலம் இரண்டுமே பழுதுபடும். சுபகிரக பார்வை இருப்பின் (அ) சேர்க்கை இருப்பின் விலக்கு உண்டு.
9. 7ம் வீட்டோன் 6, 8, 12ல் மறைந்தால் கணவன் மனைவி இடையே ஒத்துழைப்பு இருக்காது. இன்ப நிலைக்கு பங்கம் உண்டு. சுபகிரகபார்வை பலன் உண்டு.
10. 7ம் அதிபதியுடன் சனி, ராகு, கேது இவர்களால் சூழப்பட்டாலோ, சேர்க்கைப்பெற்றாலோ திருமண வாழ்வில் தொல்லைகள் ஏற்படக் காரணம் உண்டு.
11. 8ம் வீட்டோன் 7ல் இருந்தால் திருமணதடை ஏற்படும், நோயாளி தம்பதிகளாக இருக்கக்கூடும்.
12. 7ம் வீட்டில் சந்திரன் சனி கூடியிருந்தால் திருமணதடை ஏற்படும், அதிர்ஷ்டத்தை கெடுக்கும்.
13. லக்னத்திற்கு 10ல் சூரியன், சந்திரன் இருந்தால் திருமணதடை ஏற்ப்படும், மனநிலை பாதிப்பு கூட இருக்கலாம்.
படிப்பு
14. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், புதன் பலம் இல்லையெனில் இன்ஜினியரிங் படிக்க முடியாது.
15. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சூரியன் பலம் பெற்றால் தான் இரசாயன இன்ஜினிரிங் படிக்கவே முடியும்.
16. சூரியன், செவ்வாய், குரு பலம் பெற்றால்தான் மருத்துவ படிப்பில் வெற்றிபெற முடியும்.
17. சூரியன், குரு, சனி பலம் பெறவில்லையெனில் ஹோமியோபதி படிப்பில் வெற்றிபெற்று டாக்டர் ஆக முடியாது.
18. குரு பலம் இல்லையெனில் சட்ட கல்வி பயில முடியாது.
19. குரு, புதன், சந்திரன் 3, 9ம் வீடுகளோடு தொடர்பு இருந்தால் எழுத்தாளர் ஆகலாம். பத்திரிக்கைளாளராகவும் ஆகலாம்.
20. புதன், சந்திரன் பலம் கவிஞராகலாம்.
21. சுக்ரன், புதன், சந்திரன், சனி தொடர்பு இசை, சங்கீத ஞானம் பெறலாம், இசை ஞானி ஆகலாம்.
22. சூரியன், புதன், செவ்வாய், சனி போன்றோர்கள் அரசியல் பதவிதரும் இடங்கள் இவற்றோடு தொடர்பு இருந்தால் அரசியலில் வெற்றி பெரும் ஜாதக அமைப்பாகும்.
“ஜோதிட சாம்ராட்” எம்.எஸ்.மகேந்திரன் ✍