1. என் தொழில் முடங்கி விட்டது, கடனும் அதிகரித்துவிட்டது என்ன செய்யலாம்? - வேலு, கணியம்பாடி
பூராட நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னம், சுக்கிர தசை இருப்பு 12 வருடம் பிறந்த தேதி குறிக்கவில்லை. உங்கள் பையன் ஜாதகத்திலும் பிறந்த தேதி இல்லை.
2. யாருக்கு திருமணமே நடக்காது ? - வாசன், ஆலங்காயம்
லக்னத்திற்கு 7க்குரியவர், சுக்கிரனுக்கு 7க்குரியவர் 6, 8, 12ல் மறைந்தால் அந்த ஜாதகருக்கு திருமணமே நடக்காது. அந்த 3 இடத்தையும் குரு பார்த்தால் காலம் கடந்தாவது திருமணம் நடந்துவிடும்.
3. தவிர்க்கவே முடியாத மரணம் ஒருவருக்கு எப்போது வரும்? - காந்தி, காஞ்சிபுரம்
உறுதியாக சொல்லலாம். ஒருவரது ஜாதகத்தில் தசா நடக்கும் பொது சனி தசை 4ம் தசை யாகவோ, செவ்வாய் தசை 5 ஆவதாகவே குருதசை 6 ஆவதாகவோ, ராகுதசை 7 ஆவதாகவோ தசை நடக்கும் போது மரணத்தை தருவார்கள்.
4. மனைவியை இறுதிவரை காப்பாற்றும் கணவர் ஜாதகம் எப்படி இருக்கும்? - கோகிலா, சென்னை
ஆணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 11ல் சூரியன் பலம் பெற்று இருந்தால் திறமையாக சம்பாதித்து மனைவியை காப்பாற்றுவார். மேலும் சுக்ரன், மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஏதேனும் ஒன்றில் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவிக்கு ஆடை, ஆபரணம் வாங்கி கொடுத்து கடைசிவரை காப்பார்கள். இது அப்படியே மாறி இருந்தால் மனைவி, கணவனை காப்பாற்றுவார்.
5. தலைச்சனுக்கு தலைச்சன் திருமணணம் நடத்தலாமா? - பாக்கியராஜ், திருவண்ணாமலை
ஆனி மாதத்தல் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கும், ஆனி மாதத்தில் பிறந்த தலைச்சன் பெண்ணுக்கும்தான் செய்யக்கூடாது. மற்றவை எப்படி இருப்பினும் தோஷம் இல்லை. தாராளமாக திருமணம் செய்யலாம்.
6. என் மகனுக்கு மூலநட்சத்திர பெண்ணை திருமணம் செய்துவிட்டோம், என் கணவருக்கு ஆபத்தா? பரிகாரம் இருந்தால் கூறுங்களேன்? - பாக்கியம், வேலூர்
உங்கள் மருமகள் ஜாதகத்தில் மாமனார் பற்றி சொல்லும் 3ம் இடம் வலுப்பெற்று குரு அருளோடு காணப்படுகிறது. ஆகவே, உங்கள் கணவருக்கு ஆயுள் ஸ்தானம் பலப்படுகிறது. கவலை வேண்டாம். ஒற்றுமையாக இருங்கள். வாழ்க வளமுடன்.