நவகிரகங்களுடைய சஞ்சாரங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது சந்திரனுடைய சஞ்சாரம். நவக்கிரகங்களில் மிகவேகமாக நகரக்கூடிய கிரகமானது சந்திரன். ஒவ்வொரு ராசியிலும் சந்திர பகவான் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். அப்படி சஞ்சாரம் செய்யும் போது அந்த ராசியில் இருந்து ஆறாவது ராசிக்கு சந்திராஷ்டம தினமாக கருதப்படுகிறது. அதாவது, எளிமையாக சொல்வதென்றால் ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் தினம் சந்திராஷ்டம தினம் என்று சொல்லப்படுகிறது.
🔥Also Read சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதை எவ்வாறு கண்டறிவது...?
பொதுவாக சந்திராஷ்டம தினங்களில் பலர் சுபமான விஷயங்களை தவிர்க்கிறார்கள்.
அதேவேளையில், கொடுத்த கடனை திருப்பி வாங்குவது - வாங்கிய கடனை திருப்பி அடைப்பது - ராமநாமம் எழுதுவது - புதிய கல்வி கற்க ஆரம்பிப்பது - கோவில்களுக்கு நேர்த்திக்கடனை ஏதேனும் செலுத்துவது - தீர்த்த யாத்திரை, புனித யாத்திரை செல்வது - புதிதாக மருந்து உட்கொள்ள ஆரம்பிப்பது போன்றவை செய்யலாம். உடல்நலம் சார்ந்த விஷயங்களில் எந்த முயற்சி வேண்டுமானாலும் எடுக்கலாம். வீடு மனை பூஜை செய்யலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கலாம்.
சந்திராஷ்டம தினத்திற்கான ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பரிகாரம்:
- அசுபதி - முருகன்
- பரணி - பைரவர்
- கிருத்திகை - பெருமாள்
- ரோஹிணி - ஆஞ்சநேயர்
- மிருகசீரிஷம் - மஹாலக்ஷ்மி
- திருவாதிரை - சிவன்
- புனர்பூசம் - மஹாகணபதி
- பூசம் - இந்திரன்
- ஆயில்யம் - நாகதேவதை
- மகம் - அம்மன்
- பூரம் - முன்னோர்கள்
- உத்திரம் - ஐயப்பன்
- ஹஸ்தம் - ஆஞ்சநேயர்
- சித்திரை - அம்மன்
- ஸ்வாதி - நரசிம்மர்
- விசாகம் - கிருஷ்ணர்
- அனுஷம் - முருகன்
- கேட்டை - சிவன்
- மூலம் - ராமர்
- பூராடம் - முருகன்
- உத்திராடம் - பெருமாள்
- திருவோணம் - மஹாகணபதி
- அவிட்டம் - மஹாலக்ஷ்மி
- சதயம் - சூரியன்
- பூரட்டாதி - இந்திரன்
- உத்திரட்டாதி - முருகன்
- ரேவதி - நரசிம்மர்