மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்)
கிரக நிலைகள்:
v ராசியில் சுக்கிரன்,
சனி
v தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு
v சுக ஸ்தானத்தில் ராகு
v பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ)
v தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது
v விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
v 29-03-2023 அன்று ராசியில் இருந்து சனி பகவான் தனவாக்கு குடும்ப
ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார்
v 22-04-2023 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
v 08-10-2023 அன்று ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
v 08-10-2023 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பொது பலன்கள் :
சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்
போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. இது பலவிதத்திலும் உங்களுக்கு இந்த ஆண்டு
அனுகூலமாக அமையும் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. வீட்டில் அடிப்படை வசதிகளை
அதிகப்படுத்துவீர்கள். உங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். இதுவரை
சோர்ந்துபோயிருந்த உங்கள் முகம் மலரும். தோற்றத்தில் பொலிவு கூடும். குடும்பத்தில்
இருந்த வருத்தங்கள் மறையும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களுக்குக்
கைமாற்றாகக் கொடுத்துத் திரும்ப வராத பணம் கைக்குவரும். வாழ்க்கைத்துணைவழியில்
மதிப்பு, மரியாதைக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். முக்கியஸ்தர்களின் நட்பு
கிடைக்கும்.
புதிய வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு
நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புதிய நகை வாங்கும் யோகம் வாய்க்கும்.
அடகில் இருக்கும் நகையை மீட்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைக் குறைந்த
வட்டிக் கடனால் அடைப்பீர்கள்.
ராசிக்கு 4-ம் வீடான மேஷத்தில் இந்தப்
புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். வீடு
கட்டும் பணியைத் தொடர்வீர்கள். அதற்குரிய வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக
உயரும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். பணியாளர்கள் உற்சாகமாக
வேலை செய்வார்கள். கடையை மாற்றம் செய்ய யோசிப்பீர்கள். குறைந்த லாபம் அதிக விற்பனை
என்று இலக்கு வைத்துப் பணியாற்றுவீர்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெண்ட், மருந்து
வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் அலுவலகத்தில் பணிச்சுமை
அதிகமாகவே இருக்கும். ஏப்ரல் மாதத்துக்குப் பின் சக ஊழியர்கள் நெருக்கடிகள்
குறையும். மேலதிகாரி சாதகமாவார். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு
தடையின்றி கிடைக்கும்.
3 மற்றும் 4-ம்
வீட்டில் குருபகவான் ... நன்மையா...? தீமையா...?
22.4.2023 வரை குருபகவான் உங்கள்
ராசிக்கு 3-ம் வீடான மீனத்தில் நிற்பதால் அனைத்துப் பணிகளையும் மிகவும் இலகுவாக
முடிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவும் உண்டு. சுப நிகழ்ச்சிகளால்
வீடு களைக்கட்டும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும். குழந்தை
பாக்கியம் கிடைக்கும். சின்னச் சின்ன ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து நீங்கும்.
மற்றவர்களின் பேச்சைக்கேட்டுப் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும்.
23.4.2023 முதல் குருபகவான் 4-ம் வீடான
மேஷத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை.
தேவையற்ற டென்ஷன்கள் வரக்கூடும். அனைத்துப் பணிகளிலும் தடை தாமதங்கள் ஏற்பட்டே
முடிக்க வேண்டியிருக்கும். பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு வீடு
மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். யாருக்கும் கடன் கொடுக்கவோ கேரண்டி கொடுக்கவோ
வேண்டாம்.
சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?
ஜென்மச் சனியாக சஞ்சாரம் செய்யும் சனிபகவானால் அவ்வப்போது சின்னச்
சின்னப் பிரச்னைகள் தலைத்தூக்கிய வண்ணம் இருக்கும். குடும்பத்துக்குள் சண்டைகள், வாக்குவாதங்கள்
வந்து போகும். வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். 29.3.2023 முதல் 23.8.2023 வரை
சனிபகவான் அதிசாரத்தில் 2 - ம் வீடான கும்பத்தில் சென்று பாதச்சனியாக அமர்வதால்
இதுவரை இருந்த நெருக்கடிகள் தீரும். என்றாலும் இக்காலக்கட்டத்தில் யாரையும் நம்பி
எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.
ராகு - கேது கொடுப்பார்களா..?
கெடுப்பார்களா..?
8.10.2023 வரை ராசிக்கு 10-ம் வீடான
துலாமில் கேதுவும், 4-ம் வீடான மேஷத்தில் ராகுவும் நீடிப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் பிடித்தமான சம்பளம் கைக்குவருவதில்
சிக்கல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடி உண்டாகும். பயணத்தின் போது
கூடுதல் கவனம் தேவை. 9.10.2023 முதல் 9-ம் வீடான கன்னிக்கு கேது பெயர்ச்சி
அடைவதால் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அதேவேளை ராகு 30 வீட்டில் அமர்வதால்
மனதில் இருந்த பயம் விலகும். படபடப்பு நீங்கும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல்
பிறக்கும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.
நட்சத்திர பலன்கள் :
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் :
இந்த ஆண்டு செல்வ நிலையில்
எச்சரிக்கையோடு இருந்தால் எதையும் பறிபோகாமல் காத்துக்கொள்ளலாம். மிகுந்த உழைப்பு
இருக்கும். வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. கலைத்துறையில் அன்றாட பணிகளுக்கு
இடையூறு ஏற்படாது. குடும்ப நலம் உண்டு. அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை
காட்டுங்கள். நற்பணிகளில் ஈடுபடுங்கள். பேசும்போது அளந்து பேசினால் தொல்லை இல்லை.
பெரியோர்களின் ஆசியை விரும்பிப் பெற்றால் பல விஷயங்களில் இழிவு உண்டாகாது
தப்பிக்கலாம்.
திருவோணம் :
இந்த ஆண்டு பொதுவாகச் சோதனை உண்டு.
குடும்ப நலம் பாதிக்கப்படலாம். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும்
உண்டு. பெரியோர்களுக்கு மனவருத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைப்படாது. எந்த விதமான இடரையும் சமாளிப்பதோடு, கவுரவக் குறை
உண்டாகாதபடியும் காக்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். விவசாயிகளுக்கு ஏற்றம்
ஏற்படும். குடும்ப நலம் சீராக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள் :
இந்த ஆண்டு அன்றாடப் பணிகள் செவ்வனே
நடக்கும். ஆனால் மிகுந்த முயற்சியின் பேரிலேயே ஒவ்வொரு காரியத்தையும் முடிக்க
வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்குச் சங்கடம் வராது. விவசாயிகளுக்கு ஏற்றம் உண்டு.
கொடுக்கல்-வாங்கலில் அகலக்கால் வைக்க இது உகந்த நேரம் இல்லை. வீடு, நிலம்
போன்றவற்றில் தகராறு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள்.
பயன் தரும். கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப நலம் சீராக இருக்கும்.
தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.
மகர ராசியினர் கவனமாக இருக்க
வேண்டியவை
செலவுகள் அதிகமாக ஏற்படலாம்.
தேவையில்லாமல் வீண் செலவுகளை, ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்து சுப செலவுகளாக மாற்றிக்கொள்ள முயற்சி
செய்யுங்கள்.
சட்டத்துக்கு புறம்பாக சின்ன விஷயம் கூட செய்யக் கூடாது. யாருடைய தூண்டுதலையும் முழுக்க முழுக்க தவிர்க்க வேண்டும். ஆசை காட்டி உங்களை தவறான வழிக்கு யாராது தூண்டி விடுவார்கள். ஆனால் நேர்மையாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். உயர் பதவிகளில், அரசு, அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் மிகவும் அமைதியாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். சூழல் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சாதகமாக மாறி வரும் போது கூட மற்றவர்களை குற்றம்சாட்டவோ. மட்டம் தட்டி பேசவே வேண்டாம். பழி வாங்காமல் இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம்
காட்டக்கூடாது. குறிப்பாக முதியவர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். எலும்பு
சம்மந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் - வழிபாடு : சனிக்கிழமைகளில் அனுமான்
கோவிலை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு