Type Here to Get Search Results !

தனுசு ராசி புத்தாண்டு பலன்கள்-2023



 தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலைகள் :

·         ராசியில் சூரியன், புதன்(வ)

·         தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி

·         சுக ஸ்தானத்தில் குரு

·         பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு

·         ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ)

·         லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

·         29-03-2023 அன்று தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்

·         22-04-2023 அன்று குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்

·         08-10-2023 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்

·         08-10-2023 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்

பொது பலன்கள் :

ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வாழ்வில் வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடனை அடைக்க வழிகள் பிறக்கும். அந்தஸ்து உயரும். வேண்டிய சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்க்கடன் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அநாவசிய செலவுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவீர்கள்.

வியாபாரத்தில் அமோகமாக இருக்கும். பணியாளர்கள் சிறப்பாகப் பணிசெய்வார்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகத்தில்  உங்கள் ஆலோசனை அலுவலகத்தில் பாராட்டப்படும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை வியந்து பார்ப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.

4 மற்றும் 5-ம் வீட்டில்  குருபகவான் ...  நன்மையா...? தீமையா...?

இந்த ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பல தருகிறார். எனவே திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள். நண்பர்களின் அலட்சிய மனோபாவம் வருத்தம் தரும். இறைவழிபாட்டில் மனம் செல்லும். சித்தர்களின் ஆசி கிடைக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை. வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

குரு பகவான் 23.4.2023 முதல் 5-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தினரால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் மனம்மாறி வலிய பேசுவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு மெய்ப்படும். சொத்துப்பிரச்னைகளுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தி இருந்து அழைப்பு வரும்.

ராகு - கேது கொடுப்பார்களா..?  கெடுப்பார்களா..?

8.10.2023வரை லாப வீட்டில் கேது இருப்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராகு 5-ம் வீட்டில் பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பூர்வீக சொத்து வழக்குகள் இழுபறியாகும். 9.10.2023 முதல் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும்.

சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதச் சனி தொடர்வதால் தேவையற்ற மனச் சலனங்கள் வந்துபோகும். டென்ஷன், அலைச்சல் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும். எந்த விஷயத்திலும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள்.

29.03.2023 முதல் 23.08.2023 வரை சனிபகவான் அதிசாரமாக 3 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து ஒரு விடிவு உண்டாகும். புகழ், கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். இதுவரை இருந்துவந்த ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கு உற்சாகமாவீர்கள்.

நட்சத்திர பலன்கள் :

மூலம்:

இந்த ஆண்டு தொழிலில் தொய்வு உண்டாகாமல் காக்கும். வியாபாரிகளுக்குப் லாபகரமாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் வரும். மகசூல் திருப்தி தரும். மருத்துவர்கள் புகழ் பெறுவர். முதலாளி - தொழிலாளி உறவில் சிக்கல் உண்டாகாது என்றாலும் சலசலப்பு ஏற்பட இடம் தரவேண்டாம். குடும்ப விஷயங்கள் எல்லாம் சீராக அமையும். நற்பலன்கள் விளைவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கவே செய்யும். குறிப்பாக யாரிடமும் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பூராடம்:

இந்த ஆண்டு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதால் கண் வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு உள்ளாக நேரலாம். எனவே நேரம் பார்த்து உணவு உட்கொள்வதும், ஓய்வு எடுப்பதும் அவசியம். கலை, கல்வித்துறைப்பணிகள் மேலோங்கும். அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது. பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்ப சுபிட்சம் நல்லவிதமாகவே இருக்கும். அளந்து பேசுவது மிகவும் அவசியம். அவசரப்படாமல் இருப்பதும் அவசியம்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த ஆண்டு யாரிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உண்டு. அதனால் நற்பலனும் உண்டாகும். உடல் நலம் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் பிறகு பூரண குணம் பெறும். எது எப்படியிருந்தாலும் அன்றாட வாழ்வில் சுபிட்சம் பாதிக்கப்படாது. கலை, கல்வி சம்பந்தப்பட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்குப் புகழ் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு ஏற்றம் உண்டு. லாபமும் இருக்கவே செய்யும். குடும்ப நலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக இருக்கும்.

தனுசு ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

பெரும்பாலான கிரகங்கள் மிகவும் சாதகமாக இருப்பதால், பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அவரவரின் ஜாதகத்துக்கு ஏற்ப நன்மைகளும் மாறும். இருப்பினும், மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். திடீரென்று எல்லாம் நல்ல விதமாக மாறும் போது, தலைகனம் ஏறிக் கொள்ளாமல், தன்மையாக நடந்து கொள்ளவும். அதே போல, பேச்சிலும் கவனம் தேவை.

கல்வி சம்மந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும், அதை முயற்சி செய்யலாம்.

பரிகாரம் - வழிபாடு:  நவகிரக வழிபாடு செய்து வரவும். ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.