Type Here to Get Search Results !

கும்ப ராசி புத்தாண்டு ராசி பலன்கள்-2023

 கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கிரக நிலைகள் :

  • தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு
  • தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு
  • சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ)
  • பாக்கிய ஸ்தானத்தில் கேது
  • லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)
  • விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள் :

  • 29-03-2023 அன்று ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
  • 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
  • 08-10-2023 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்
  • 08-10-2023 அன்று கேது பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பொது பலன்கள் :

ராசிக்கு 3-ம் வீடான மேஷத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே பேச்சில் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

லாப வீடான தனுசில் சூரியனும் புதனும் ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சாரம் செய்கிறர்கள். இதனால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். உறவுகள் தேடிவருவர். அவர்களிடையே உங்கள் பெயர் ஓங்கியிருக்கும். வெளிவட்டாரத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். என்றாலும் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பெரிய கடன்களை வாங்க வேண்டாம். அதேபோன்று யாருக்கும் கடன் தரவும் வேண்டாம். வேலையாட்களால் லாபம் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். அரிசி, பூ, எலக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். கூடும். ஆனால் மே மாதம் முதல் பணிச்சுமை கூடும். மற்றவர்கள் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் இருக்கும் என்றாலும் மனநிறைவு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும்.

2 மற்றும் 3 ம் வீட்டில் குருபகவான்...  நன்மையா...? தீமையா...?

22.4.2023 வரை குருபகவான் தங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான மீனத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் இருந்தாலும் அது நல்ல செலவாகவே இருக்கும். உறவினர்கள் தேடிவந்து உறவு பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குழந்தை இல்லாமல் ஏங்கும் தம்பதிகளுக்குப் பிள்ளைச் செல்வம் கிடைக்கும். புது வீடு மனை வாங்கும் கனவு மெய்ப்படும். அதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். புகழ்பெற்ற திருக்கோயில்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இருந்த பிரச்னைகள் விலகும்.

வீடு மனை விற்பது சாதகமாகும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். வழக்கில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக வரும்.

23.4.2023 முதல் குருபகவான் பெயர்ச்சி அடைந்து 3 ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். என்றாலும் பணிச்சுமை இருந்த வண்னம் இருக்கும்.

புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். அடுத்தவர்களை அளவுக்கு மீறி நம்பவேண்டாம். தேவையற்ற ஏமாற்றங்கள் ஏற்படலாம். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் வரிசை கட்டும். சகோதரர்களிடையே இருந்த வருத்தங்கள் தீரும். இந்தக் காலகட்டத்தில் புதிய நட்புகளை ஏற்கும் முன்பு நன்கு ஆலோசித்துச் செய்வது நல்லது.

சனி சஞ்சாரம் சாதகமா...பாதகமா...?

விரையச் சனியாக 12 ம் வீட்டில் சஞ்சாரம் செய்துவரும் சனிபகவானால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் வாட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சித்தர்கள் மகான்களின் தரிசனம் மனதுக்கு ஆறுதல் தரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்குள்ளேயே சஞ்சாரம் செய்து ஜென்ம சனியாகப் பலன்தர இருக்கிறார். இதனால் இக்காலகட்டத்தில் வீண் விரையம்விரக்திஏமாற்றம்காரியத் தடை வந்து நீங்கும். இருப்பினும் உண்மையாக உழைப்பவர்களுக்கு அதற்குரிய பலம் கிடைக்கும்.

ராகு - கேது கொடுப்பார்களா..கெடுப்பார்களா..?

8.10.2023 வரை உங்கள் ராசிக்கு 9 - ம் வீடான துலாமில் கேதுபகவான் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். அவருடன் தேவையற்ற விவாதங்களைத் தடுப்பது நல்லது. சொத்துப் பிரச்னைகளும் தீர்வு காணாமல் இழுபறியாகவே இருக்கும். ஆனால் 3-ம் வீடான மேஷத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் எந்தப் பிரச்னையையும் சந்திக்கும் துணிச்சல் பிறக்கும். பக்குவமாக முடிவெடுப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் வாய்க்கும்.

9.10.2023-ம் தேதிக்குப் பின் 2-ம் வீட்டில் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணிச்சுமை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். வாக்குஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துங்கள். பயணங்களில் கவனம் தேவை.

நட்சத்திர பலன்கள் :

அவிட்டம் 3, 4 பாதங்கள்: 

இந்த ஆண்டு உங்கள் பணிகள் பாதிக்கப்படாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் வீண் தொல்லைகளைத் தடுக்கலாம். தொழில் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழில் சிறக்கும். வியாபாரம் செழிக்கும். உங்களை வாழ வைக்கும் பொறுப்பை உங்களைச் சார்ந்த பெரியோர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்ப நலம், தாம்பத்தியம் எல்லாம் சீராக இருக்கும். தகுதி வாய்ந்தவர்களுகளுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம்.

சதயம்

இந்த ஆண்டு உங்களுக்கு பெருந்தொல்லை ஏற்படாது. தொழில் சிறப்படையும். முதலாளி தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். எனினும் மனம் தளர வேண்டாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமானாலும் அதற்காக மிகுந்த உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம். எனினும் குடும்ப நலம் பாதிக்கப்படாது. விருந்தினர் வருகையும், விருந்தினராகச் செல்லக்கூடிய நிலையும் உண்டு. புத்திரர்களை முன்னிட்டுப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் :

இந்த ஆண்டு பெருந்தொல்லை உண்டாக இடமில்லை. மனதிற்கு இனிமை தரும் சில நன்மைகள் நடக்கும். உங்களுடைய அந்தஸ்து பாதிக்கப்படாது. முழுமுயற்சியுடன் செய்யப்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் அவ்வளவு சவுகரியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் தடைப்படாது. கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அரசியல்வாதிகள் கவுரவிக்கப்படுவார்கள். ஆன்றோர் நல்லாசி கிடைக்கும்.

கும்ப ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை :

பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அகலக்கால் வைக்காதீர்கள். பணியில் இருப்பவர்கள் வேலை மாற வேண்டும் என்று விரும்பினால், கவனமாக உங்களுக்கு பொருந்துமா என்று பார்த்துக் கொண்டு முடிவு செய்யுங்கள். உறவுகளை மதிக்க வேண்டும் யாரையும் யாருடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேசாதீர்கள். புதிதாக எந்த விஷயம் தொடங்குவதாக இருந்தாலும் வீட்டில் அருகில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைத்துவிட்டு தொடங்கவும்.

செய்யும் தொழில் தொழில் மற்றும் பணியில் முடக்கம் ஏதாவது இருந்திருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். ஆனால் அதிரடியான மாற்றத்தையும் பெரிய முன்னேற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்காதீர்கள். இதுநாள் வரை இருந்த செலவுகள் கொஞ்சம் கட்டுக்குள் வரும். எனவே சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று பாருங்கள்.

பணத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் அலட்சியம் கூடாது. சில நேரங்களில், ஒரு சிலருக்கு சனிப்பெயர்ச்சி காலத்தில் அதிரடியான உயர்வுகள் காணப்படும். இதை மற்றவர்கள் பொறாமையுடன் பார்ப்பார்கள். எனவே உங்களுக்கு எதிரான சதி வேலைகளில் நீங்கள் கவனமாக இருங்கள்.

கல்விக் கடனை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டம் ஆகும். ஆனால் நட்பு யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனம் மிகவும் தேவை. அவசியம் இருந்தால் மட்டுமே தொலை தூர பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

வயிறு காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

பரிகாரம் - வழிபாடு: குலதெய்வ வழிபாடு அவசியம். ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வாருங்கள். முடிந்த போதெல்லாம் விநாயகர் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும். சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள் : கிழக்கு, வடக்கு

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.