கடகம் (புனர் பூசம் 4ம்
பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலைகள் :
Ø
சுக ஸ்தானத்தில்
கேது
Ø
ரண ருண ரோக
ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)
Ø
சப்தம
ஸ்தானத்தில் சுக்கிரன், சனி
Ø
பாக்கிய
ஸ்தானத்தில் குரு
Ø
தொழில் கர்ம
ஜீவன ஸ்தானத்தில் ராகு
Ø
லாப ஸ்தானத்தில்
செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
Ø
29-03-2023 அன்று அஷ்டம ஸ்தானத்திற்கு சனி பகவான்
பெயர்ச்சியாகிறார்
Ø
22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு
பெயர்ச்சி ஆகிறார்
Ø
08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு
மாறுகிறார்
Ø
08-10-2023 அன்று கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கு
மாறுகிறார்.
பொதுபலன்கள்
:
உங்கள் ராசிக்கு 10-வது வீடான மேஷ ராசியில் இந்த ஆங்கிலப்
புத்தாண்டு பிறக்கிறது. பத்தாமிடம் உழைப்புக்குரியது. எனவே இந்த ஆண்டு உங்கள்
உழைப்பு மேம்படும். கடினமாக உழைத்து சாதிப்பீர்கள். பணிரீதியிலான சவால்கள்
மனப்போராட்டங்கள் ஓயும். உங்கள் பேச்சுத் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலைகளை
முயன்று முடிப்பீர்கள். நீண்ட நாள்களாகத் தடைப்பட்டிருந்த பணவரவு உண்டாகும்.
கடன்களை அடைக்க வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள்.
குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும்.
குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும்.
சுபகாரியங்கள் நடைபெறும்.
சூரியன், உங்கள்
ராசிக்கு 6-ம் வீடான தனுசில் வலுவாக நிற்பதால் அரசுக்
காரியங்கள் சாதகமாகும். வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிச்சுமை
அதிகரிக்கும். உறவுகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். சில
விமர்சனங்கள் உங்கள் மீது எழும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
தேவையை அறிந்து செயல்படுவார்கள். புதிய பணியாளர்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவு
படுத்த வாய்ப்பு தேடிவரும். புதிதாக முதலீடுகளை நன்கு ஆலோசித்துச் செய்யலாம்.
ஜனவரி, மே, ஜூன்
மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பும்
உண்டாகும். சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
உத்தியோகத்தில் சுமுகமான நிலை
உண்டாகும். அதிகாரிகள் இதுவரை உங்களிடம் காட்டிய கடுகடுப்பைக் குறைத்துக்
கொள்வார்கள். சம்பளம் உயர்வு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். கிடைக்கும்
பணியில் உங்களை நிரூபித்துக் காட்டுவதன் மூலம் பல சலுகைகள் கிடைக்கும். என்றாலும்
மறைமுக எதிர்ப்புகள் இருந்த வண்ணம் இருக்கும். அலுவலகத்தில் தேவையற்ற விசாரணைகளை
சந்திக்க வேண்டிய சூழல் வரும். மனம் தளராமல் துணிவோடு சந்தியுங்கள். அனைத்தும்
நன்மையாகும்.
குருபகவான் பார்வை
நன்மையா...? தீமையா...?
22.4.2023வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான மீனத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சின்னச்
சின்னக் கடன்களை அடைப்பீர்கள். புதிய வீடு அல்லது மனை வாங்கும் யோகம் வாய்க்கும்.
தந்தையின் உடல் நிலை சீராகும். சுபகாரியங்களில் கலந்து கொள்ளும் யோகம் வாய்க்கும்.
23.04.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீடான மேஷத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய
இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். அரசு தொடர்பான பணவிஷயங்களில் கவனமாக
நடந்துகொள்ளுங்கள். எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் அந்தரங்க ரகசியங்களை
யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?
சனிபகவான் ஏழாம் வீட்டில் கண்டக
சனியாகத் தொடர்கிறார். இதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வந்துபோகும்.
உடல் நலத்திலும் அக்கறை காட்டுவது நல்லது. 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 8 - ம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து அஷ்டம
சனியாகப் பலன் கொடுக்க இருக்கிறார். இதனால் மனதில் தேவையற்ற கவலைகள் குடிகொள்ளும்.
தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குலதெய்வ
வழிபாடுகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் இந்தக் காலகட்டத்தில் நன்மைகள் பெருகும்.
ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?
8.10.2023 வரை கேது உங்கள் ராசிக்கு நாலாம் வீடான
துலாமில் சஞ்சாரம் செய்கிறார். ராகு பகவான் 10-ம்
வீடான மேஷத்தில் இருக்கிறார். இதனால் தேவையற்ற டென்ஷன் அலைச்சல் இருந்த வண்ணம்
இருக்கும். குடும்பத்தினரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும். அதேவேளை 9.10.2023 முதல் கேது 3-ம்
வீடான கன்னியிலும் ராகு 9 ம் வீடான மீனத்திலும் அமர்ந்து பலந்தர
இருக்கிறார்கள். இதனால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவால்களை மிகத்
துணிவுடன் சந்திப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் செலவுகள் அதிகரிக்கும்.
வேற்றுமொழி, மதம் சார்ந்தவர்களால் நன்மைகள் நடைபெறும்.
புனர்பூசம் 4ம்
பாதம்: இந்த ஆண்டு இயந்திரப் பணி
சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி
அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு
பிரச்சினைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது.
எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது
நல்லது.
பூசம்: இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள்
நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும். வியாபாரிகள் கவனக்
குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும்.
தெய்வப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மனம் அமைதி அடையும்.
ஆயில்யம்: இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து
நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு
பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை
இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம்
மகிழ்ச்சியுடன் விளங்கும். அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி
கிடைக்கும்.
கடக ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை :
துணிவாக இருப்பதைவிட பணிவாக இருப்பது
மிகவும் நல்லது. உங்கள் பொறுப்புகளை நீங்களே முன்னின்று செய்ய வேண்டும். யாரையும்
நம்பி முக்கியமான வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆனால்
நீங்கள் கடினமாக உழைப்பது அடுத்தடுத்த காலங்களில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கு
ஒரு பாலமாக அமையும்.
இப்பொழுது நீங்கள் எந்த
வேலையில்/வணிகத்தில் அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அதை மாற்ற வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள், வணிகர்கள் மட்டும் அல்லாமல் மாணவர்கள் இல்லத்தரசிகள்
என்று அனைவருக்குமே புதிய மாற்றங்களை எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். புதிய
ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். அவ்வாறு சூழ்நிலை ஏற்பட்டால் பல முறை ஆய்வு
செய்த பிறகு முடிவு செய்யுங்கள். உடல் நல பாதிப்புகள், வீட்டில் செலவுகள், தேவையில்லாத விரயங்கள் ஆகியவை அதிகரிக்கும்.
பண வரவும் செலவும் சரியாக இருந்தாலும்
ஆடம்பரம் மற்றும் தேவையில்லாத விஷயங்களில் செலவு செய்வதை முழுவதுமாக தவிர்க்க
வேண்டும். வெட்டியாக செலவு செய்வது மற்றவர்களுக்கு போக்குக் காட்டுவதற்காக
முன்னிலைப்படுத்துவது ஆகியவை பிரச்சனையாகத்தான் மாறும்.
பயணம் செய்யும் போது பத்திரமாக இருக்க
வேண்டும். வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள், வாகனங்கள் என்று ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை
உடனே சரி பார்க்க வேண்டும். தேவையில்லாத பயணத்தை தவிருங்கள். எந்த விதத்திலும்
அலட்சியமாக இருக்க வேண்டாம்.
எலும்பு சம்பந்தப்பட்ட நோய், தூக்கமின்மை, தலைவலி
ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.
பரிகாரம் - வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு சாந்தமான அம்மன் வழிபாடு
மற்றும் கால பைரவர் வழிபாடு ஆகியவை தடைகளை நீக்கி நிம்மதியை தரும். திங்கட்கிழமை
தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16
முறை வலம் வரவும். சனிக்கிழமை
சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு,
வடக்கு